திமுகவில் அதிரடியாக மாற்றப்பட்ட 7 மாவட்டச் செயலாளர்கள்! மேற்கு மண்டலத்தில் அடைந்த தோல்வியால் இந்த மாற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை | அமமுக மற்றும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவி!

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் மேல் ஆகும் நிலையில் அக்கட்சியின் உட் கட்சி தேர்தல் நடைபெற்று வந்தன. சென்னையில் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 72 மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவில் 71 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கான அறிவிப்பு மட்டும் வெளியிடப்படவில்லை.

அறிவிக்கப்பட்ட 71 மாவட்ட செயலாளர்களில் 7 பேர் மாற்றப்பட்டுள்ளனர். அதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செங்குட்டுவனை நீக்கிவிட்டு தற்பொழுது மதியழகன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ரஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக இருந்தவர். தேர்தலுக்கு முன் திமுகவில் இணைந்த இவருக்கு தற்பொழுது மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த இன்பசேகரன் நீக்கப்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தவர். பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையின் காரணமாக பிரிந்து அமுமுகவில் இணைந்தார். சட்டமன்றத் தேர்தலில் அமுமுக சார்பில் போட்டியிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இணைந்த இவருக்கு தற்பொழுது மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த மூர்த்தியை நீக்கிவிட்டு மதுரா செந்தில் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டத்தை பொருத்தவரை கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு ஆகிய இரு மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கோவை தெற்கு மாவட்ட செயலாளராக தளபதி முருகேசன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆக தொண்டாமுத்தூர் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக தற்போதைய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு பேராவூரணி எம்எல்ஏவுக்கும் பட்டுக்கோட்டை எம்எல்ஏவுக்கும் கடும் போட்டி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் மொய் விருந்தில் 11 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த பேராவூரணி எம்எல்ஏ அசோக் குமார் தான் அவர். 

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த பூபதி நீக்கப்பட்டு சந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்த ஏழு பேர் மட்டுமே மாவட்ட செயலாளர் பதவிக்கு புதிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்களை தவிர்த்துப் பார்த்தால் மற்ற ஐந்து மாவட்டச் செயலாளர்கள் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுக குறைவான இடங்களில் வெற்றி பெற்றதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

English 7 district secretaries were changed in DMK This change due to the defeat in the western region


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->