பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு.. இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான  தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக பொறியியல் படிப்புக்கு ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

அந்த வகையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 1.5 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில் பொறியியல் கல்லுரிகளில்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக 1.87 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். 

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் மூலம் கடந்த 20-ந்தேதி நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்து, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering councelling rank list today release


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->