12 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்.! திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் என்றால் அது திருச்சி விமான நிலையம் தான். இந்த விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த விமானநிலையத்திற்கு நேற்று மலேசியாவில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு வர வேண்டிய விமானம், காலத் தாமதமாக இரவு 2 மணிக்கு வந்தது. அதன் பின்னர் மலேசிய செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அனைவரும் அதில் ஏறி அமர்ந்தனர்.

அதன் பின்னர், விமானம் பயணிகளுடன் புறப்பட தயாரான போது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தின் பிரச்சனையை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.

இதன் காரணமாக, சுமார் 180 பயணிகள் 12 மணி நேரமாக விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பலமணி நேரம் காத்திருந்ததால் ஆத்திரத்தில் பயணிகள், விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும், பயணிகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் தகவல்களை விமான நிலைய ஊழியர்கள் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engine failure to malaysia flight in trichy airport


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->