திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களே.!! மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் பிப்ரவரி 1ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் "கனமழை காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அடுத்து அபராதத்தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்தவேண்டிய கால அவகாசம் வரும் ஜனவரி 2-ம் தேதி வரை என்று இருந்தது.

தற்போது வெளியிட்டு உள்ள அறிவிப்பின் படி மின் கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த வரும் பிப்ரவரி 01 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற்சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில், பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

electricity bill pay time extended again for thoothukudi thirunelveli


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->