ராம்நாட்டில் "ஐயா OPS-க்கு" எதிராக பாஜக புகார்.. உடனே‌ கிழித்த அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நான்கு பேர் அதே பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 ஓபிஎஸ்-கள் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்க கோரி பல்வேறு சின்னங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக, பன்னீர்செல்வம் பெயரில் மேலும் 5 பேர் போட்டியிடுகின்றனர்.

அவர்கள் கரும்பு விவசாயி, வாளி, திராட்சை கொத்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில், பிரசார போஸ்டர்கள் பரமக்குடி முழுவதும் ஒட்டப்பட்டிருந்த‌து. இதுகுறித்து பாஜக வழக்கறிஞர் அளித்த புகாரை அடுத்து தேர்தல் அதிகாரிகள் சுவரொட்டிகளை அகற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election officer remove Ops posters


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->