தேர்வு மோசடி.. 415 பேருக்கு வாழ்நாள் தடை!
Election fraud Lifetime ban for 415 people
ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 109 பேர் ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை தடை செய்யப்பட்டனர்.
அரசு வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபடுபவர்கள் பற்றி ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் தணிக்கை செய்தது.அந்த தணிக்கையின் அடிப்படையில் அப்போது போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், பட்டம் பெற்றதாக போலி சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பிற சந்தேகத்திற்கு இடமான வழிகளில் மோசடியில் ஈடுபட்ட தகுதியற்ற 524 போட்டியாளர்களை பொது தேர்வு ஆணையம் கண்டுபிடித்தது.
இதையடுத்து அவர்களுக்கு பொது தேர்வு ஆணையம் தேர்வுகளில் பங்குபெற தடை விதிக்கப்பட்டது. மேலும் அவர்களில் 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளை எதிர்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டது . அதுமட்டுமல்லாமல் மீதமுள்ள 109 பேர் ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை அரசு தேர்வுகளை எதிர்கொள்ள தடை செய்யப்பட்டனர்.
அந்த தணிக்கையின் அடிப்படையில் அதிகப்பட்சமாக ஜலூர் மாவட்டத்தில் 128 பேர் தடை செய்யப்பட்டனர். அப்போது பெரும்பாலானவர்கள் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள், ஆவணங்களை வழங்கியதாக 157 பேர் தடை பெற்று உள்ளனர்.இதேபோல 148 பேர் தேர்வில் நியாயமற்ற வழிகளில் மோசடியில் ஈடுபட்டதாக தடை விதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடை பெற்றவர்களில் 514 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்று பொது தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது .இதேபோல மற்றவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒதுக்கீடு சலுகையை பெறுவதற்காக போலி விவாகரத்து சான்றிதழ் பெற்று உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படடு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று பொது தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Election fraud Lifetime ban for 415 people