#கிருஷ்ணகிரி || தமிழக எல்லையில் ரூ‌.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொரியர் சர்வீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனைகள் கொரியர் சர்வீஸ் வாகனத்தில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்க நகைகள் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரியர் சர்வீஸ் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உதவியாளரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election flying squad seized 30 kg gold worth Rs15 crore in Krishnagiri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->