கரூர், நாமக்கலில் மீண்டும் பரபரப்பு! மணல் குவாரிகளில் ED அதிரடி சோதனை! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் கரூர் மாவட்டம் மல்லம்பாளையம் குவாரிக்கு செல்லும் சாலையை ஊழியர்கள் சேதப்படுத்தியதோடு மணல் குவாரி தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் ரசீதுகளுடன் அங்கிருந்து தப்பி சென்றதால் சோதனை செய்யாமல் அமலக்கத்துறை அதிகாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் அந்த மணல் குவாரியை அமலாக்கத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்நிலையில் நேற்று 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது குவாரியில் உள்ள மணல் இருப்பு, மணல் அனுமதிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்டதா? அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்கப்பட்டதா? சல்லடை போட்டு அலசினர். அதே வேலையில் சட்டவிரோதமாக மணல் குவாரி செயல்பட்டதா? என்ற கோணத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.

அதே போன்று நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் எடுக்கப்படும் மணல் மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு கிடங்கில் சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அங்கு கடந்த செப்டம்பர் 12ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதோடு ஆவணங்களையும் கைப்பற்றினர்.  இந்நிலையில் ஒருவந்தூர் குவாரி மற்றும் செவிட்டுரங்கன்பட்டி மணல் சேமிப்புக் கிடங்கில் கைப்பற்றபட்ட ஆவணங்களில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளதா? என அமலாக்கத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED raid in Karur Namakkal sand quarries again


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->