மீண்டும் களம் இறங்கிய ED அதிகாரிகள்.!! சென்னையில் 13 இடங்களில் அதிரடி சோதனை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஜேம்ஸ் வால்ட்டர் என்பவரின் ஏற்றுமதி நிறுவனம் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மீது ரூபாய் 225 கோடி நிதி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. 

அந்த வழக்கின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் 13 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

IOB மற்றும் SBI உள்ளிட்ட 5 வங்கிகளில் ₹225.15 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஓசியானிக் எடிபிள்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வங்கியில் இருந்து கடன் பெற்ற பிறகு, அவர்கள் கடன் தொகையை தங்கள் சொந்தக் கணக்குகள், மூன்றாம் தரப்புக் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்குகளுக்கு எந்த வியாபாரமும் செய்யாமல் செலுத்திய உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் சிபிஐ விசாரணையின் போது ஓசியானிக் எடிபிள்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் கடந்த 2015 வெள்ளத்தில் ஆவணங்கள் அனைத்தும் அடித்த சென்றதாக சிபிஐ விசாரணையில் தெரிவித்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகளை தொடர்ந்து தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED officers raided 13 places in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->