IAS அதிகாரிகளுக்கு எதிராக ED வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் கடந்த ஆண்டு மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி அதிபர்களின் சொத்துக்களை முடக்கினர்.

அதே வேளையில் மாவட்ட ஆட்சியர்கள் பலருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியிருந்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். அமலாக்கத்துறை அனுப்பிய சமனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மணல் முறைகேடு குற்றச்சாட்டில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பி சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED appeal case against IAS officer hearing on Friday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->