அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட் வசதி விரைவில் அறிமுகம் - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.! - Seithipunal
Seithipunal


அரசுப் பேருந்துகளில் விரைவில் இ-டிக்கெட் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கோவை திருப்பூர் ஈரோடு உதவி மண்டலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுகள் என மொத்தம் 518 பேருக்கு ரூ.145.58 கோடி மதிப்பிலான பண பலன்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கோவையில் நேற்று வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், பைக் டாக்ஸி நடைமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இருசக்கர வாகனங்கள் வாடகை டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை. இதற்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் முழுமையாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை மாநகரப் பேருந்துகளில் இ-டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்த தானியங்கி கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் எனவும் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 2400 புதிய பெண்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களில் பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் 2000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

e-ticket introduce in tamilnadu govt bus soon


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->