தர்மபுரியின் வளர்ச்சியே எனது வாழ்நாள் குறிக்கோள்... உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுளேன் - மரு. அன்புமணி உருக்கமான பேச்சு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மக்களுக்கு நான் எனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டுளேன் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நெகிழ்ச்சியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.பி வெங்கடேஸ்வரனை ஆதரித்து மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நல்லாட்சி தொடர வேண்டும். தர்மபுரி திமுக ச.ம.உவை யாரவது இந்த ஐந்தாண்டில் பார்த்ததுண்டா?.. ஏதேனும் ஒரு திட்டம் செய்யப்பட்டு இருக்குமா?. அதனை மக்கள் சிந்திக்க வேண்டும். மிக மிக மோசமாக செயல்படும் திமுக உறுப்பினர் என்றால், அது தர்மபுரி திமுக ச.ம.உ தான். அவர் மக்களுக்கான பணியை செய்வதில் தோல்வியுற்றுள்ளார். தர்மபுரியில் உள்ள அனைத்து பிரச்சனையும் எனக்கு தெரியும். பல எதிர்ப்புகளை மீறி என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள். உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். 

எனது நோக்கம் தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சி. மொரக்பூர் - தர்மபுரி இரயில் திட்டம் 70 வருட கோரிக்கை. பலமுறை ஆட்சியாளர்களை சந்தித்து, இன்று எனது தலையில் அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. மொரக்பூர் - தர்மபுரி திட்டம் இணைக்கப்ட்டதும், தர்மபுரி மாவட்டம் வளர்ச்சியடையும். எனது ஆசை தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் இங்கு பணியாற்ற வேண்டும். யாரும் வெளிமாநிலம் அல்லது வெளிமாவட்டத்திற்கு செல்ல கூடாது. அது கட்டாயம் நிறைவேறும். 1200 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அது அமைந்ததும் எனது முயற்சியில் பல தொழில் நிறுவனங்களை இங்கு கொண்டு வருவேன். 

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தர்மபுரி மாவட்டம் 80 விழுக்காடு பயனடையும். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும், விவசாயம் செழிக்கும். சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவன் என்ற அடிப்படையில் எனக்கு தர்மபுரிக்கு என்ன தேவை என்பது நன்றாக தெரியும். பல திட்டங்களை சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றுகையில் நான் கொண்டு வந்துள்ளேன். நமது விவசாயி அணியின் விவசாய வேட்பாளர் வெங்கடேஸ்வரனை மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றியடைய செய்ய வேண்டும். 

பெண்களுக்கு பாதுகாப்பு மட்டுமல்லாது, பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதம் ரூ.1500 முறையில் வருடத்திற்கு ரூ.18 ஆயிரம் கிடைக்கும். வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த திட்டங்கள் மிக முக்கியமானவை. மு.க ஸ்டாலினை போல வெற்று அறிவிப்புகளை முதல்வர் வழங்கவில்லை. நகைக்கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை தமிழக முதல்வர் நிறைவேற்றிவிட்டார். எனது வாழ்நாள் முழுவதும் தர்மபுரி மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Feeling Speech about Dharmapuri Constituency MP Victory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->