ஜெயலலிதா பாணியில் திமுக அமைச்சர்களை எச்சரித்த ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பிரச்சனை தூண்டும் வகையில் பேசினாலும் பொறுமையாக இருங்கள்!

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை 6:10 மணி முதல் 7:00 மணி வரை சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பல முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகளை சட்ட பேரவையில் எவ்வாறு எதிர்கொள்வது, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு எவ்வாறு பதில் அளிப்பது என அமைச்சர்களிடம் ஸ்டாலின் விவாதித்ததாக தெரிய வருகிறது.

இந்த கூட்டத்தில் தொழில்துறையில் உள்ள சிக்கல்கள், புதிய தொழில் தொடங்குவது மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தான விவாதங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் தார்ப்பாய்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அது குறித்தான விவாதம் நடைபெற்றதாக தெரிகிறது. தமிழக அரசு கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்கிட மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ளது. இது குறித்தான விவாதமும் மேற்கொள்ளப்பட்டது.

அதே போன்று சட்டசபையில் நிறைய ஏற்றப்பட வேண்டிய மசோதாக்கள், தாக்கல் செய்யப்பட வேண்டிய அறிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டம் முடிவடைந்த பின் அமைச்சர்கள் இடையே பேசிய ஸ்டாலின் "பொதுவெளியில் பேசும் போது கண்ணியத்துடன் எச்சரிக்கையாக பேசுங்கள். எதிர்க்கட்சிகள் சட்டசபையில் உங்களை தூண்டும் வகையில் பேசலாம் அவ்வாறு பேசினாலும் பொறுமையாக இருங்கள். மக்களின் பிரச்சினையை கவனிங்கள். அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டிய சூழலுக்கு என்னை தள்ளி விட வேண்டாம்" என அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் ஸ்டாலின்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not push me into a situation Cabinet needs to be reshuffled Stalin warned the ministers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->