திமுகவில் அடுத்த விக்கெட்... அதிர்ச்சியில் அறிவாலயம்.. கொண்டாட்டத்தில் கமலாலயம்.! - Seithipunal
Seithipunal


மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் காலூன்ற இயலாமல் தவித்து வந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கடுமையான தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கட்சியை வலுப்படுத்த பல முயற்சிகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் பணிகளை செய்து வருகிறது. 

இந்த தேர்தலில் கூட்டணியாகவோ அல்லது தனியாகவோ களம்கண்டு கட்டாயம் சட்டப்பேரவைக்குள் சட்டமன்ற உறுப்பினர்களை இடம்பெறச்செய்ய வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் பாரதிய ஜனதா கட்சியில் நேரடியாக வந்து இணைந்துள்ளனர். மாற்று கட்சியினரும் விரைவில் பாரதிய ஜனதா கட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வி.பி. துரைசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ கு.க செல்வம் மற்றும் நடிகை குஷ்பூ என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதில் திமுக எம்.எல்.ஏ கு.க செல்வம் மட்டும் பாஜகவில் அதிகாரபூர்வமாக இணையவில்லை. இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே திமுக பெண் சட்டமன்ற உறுப்பினரான பூங்கோதை ஆலடி அருணா பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, அதற்கு மறுப்பு தெரிவித்து அவரது ட்விட்டர் பதிவில் பதில் அளித்துள்ளார். ஆனால், வரும் நாட்களில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Aladi Aruna BJP Join issue is fake


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal