7 தொகுதிகளில் திமுக உறுப்பினர் சேர்க்கை..ஜெகத்ரட்சகன், எம்.பி., தொடங்கி வைத்தார்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் 7 தொகுதிகளில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை திமுக அமைப்பாளர் இரா. சிவா முன்னிலையில் எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி., தொடங்கி வைத்தார்.
 
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர் தளபதி அவர்கள் ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் பாசிச ஆதிக்கத்திலிருந்தும், இதற்கு துணை நிற்கும் புதுச்சேரி பா.ஜ.க கூட்டணி அரசிடமிருந்தும் மாநிலத்தை மீட்டு, புதுச்சேரியின் மண்–மொழி–மானம் காக்க, தி.மு.கழகத்தின் சார்பில்  “உடன்பிறப்பே வா” பரப்புரையை முன்னெடுக்க ஆணையிட்டுள்ளார்.

புதுச்சேரி, மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, பாசிச பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளைக் கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டு,  தலைமைக் கழகத்தால் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்கள் தலைமையில் ஏற்கனவே முத்தியால்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையனபேட்டை ஆகிய ஐந்து தொகுதிகளில் கடந்த 6–ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக இன்று ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட உளவாய்க்கால் கிராமத்திலும், கதிர்காமம் தொகுதி சண்முகாபுரத்திலும், தட்டாஞ்சாவடி தொகுதி பாக்குமுடையான்பேட்டிலும், இலாசுப்பேட்டை தொகுதி அரசு மருத்துவமனை அருகிலும், காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் பாரதி நகரிலும், காமராஜர் நகர் தொகுதி கிருஷ்ணா நகரிலும், ராஜ்பவன் தொகுதி மிஷன் வீதி – பெருமாள் கோவில் சந்திப்பிலும் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டது.

முகாமிற்கு, மாநில கழக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தலைமை வகித்தார். 

அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்கள் கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்தார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை தொகுதி செயலாளர்கள் பி. சா. இளஞ்செழியப்பாண்டியன், ப. வடிவேல், க.ர. ஆறுமுகம், கோ. தியாகராஜன், சே. சத்தியவேலு, ர. சிவக்குமார், ஜெ. மோகன் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளரான மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் ரோ. நித்தீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தா. சரவணன், பூ. மூர்த்தி, மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், வெ. ராமசாமி, ப. செல்வநாதன், பா. செ. சக்திவேல், ந. தங்கவேலு, பெ. வேலவன், வீ. சண்முகம், ஜெ. வேலன், எஸ். தர்மராஜன், ஆர். கோகுல், ஆர். ரவீந்திரன், டி. செந்தில்வேலன், கே.பி. இளம்பரிதி, பெ. பழநி, மு. பிரபாகரன், எஸ். எஸ். செந்தில்குமார், வே. மாறன், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் எம்.ஆர். திராவிடமணி, இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், எல். மணிகண்டன், து. சக்திவேல், பி.ஆர். ரவிச்சந்திரன், வெ. சக்திவேல், க. ராஜாராமன், செல்வ. பார்த்திபன், பி கலிய. கார்த்திகேயன், செ. ராதாகிருஷ்ணன், ம. கலைவாணன், அணிகளின் அமைப்பாளர்கள் தொமுச அண்ணா அடைக்கலம், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், தகவல் தொழில்நுட்ப அணி  தாமோ. தமிழசரன், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி,  தொண்டர் அணி  வீரன் (எ) விரய்யன், விவசாய அணி வெ. குலசேகரன், வர்த்தகர் அணி  சு. ரமணன், இலக்கிய அணி  சீனு. மோகன்தாசு, மீனவர் அணி ந. கோதண்டபாணி, ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், பொறியாளர் அணி  ஆ. அருண்குமார், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், விளையாட்டு மேம்பாட்டு அணி  ந. ரவிச்சந்திரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி  ம. மதிமாறன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது, மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், சுற்றுச்சூழல் அணி த. முகிலன், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் பசுபிக் சங்கர் மற்றும் அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK membership enrollment in 7 constituencies Jeyaktharatchagan MP inaugurated it


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->