கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி! வழக்கம்போல் மத்திய அரசின் மீது பழி போட வேண்டாம்! - விஜயபாஸ்கர்! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் அழுத்தத்திற்கு வளைந்து கொடுக்காமல் சேஸ் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது!

கரூர் மாவட்டம் பஸ் பாடி பில்டிங் நிறுவனங்களுக்கு பெயர் பெற்றது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு பெரும்பாலான பேருந்துகள் கரூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களால் பாடி பில்டிங் செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சாலை போக்குவரத்து சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த சீர்திருத்தால் ஏஐஎஸ்-52 தரச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயம் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2018- 2020 வரை 5000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான பேருந்துகள் கரூரில் உள்ள நிறுவனங்களால் பாடி பில்டிங் செய்யப்பட்டவை.

தற்போது உள்ள திமுக அரசாங்கம் போக்குவரத்து துறையில் 1771 புதிய பேருந்துகளை வாங்க அரசு சார்பில்  ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரூரில் உள்ள பஸ் பாடி பில்டிங் நிறுவனங்கள் முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் "அதிமுக ஆட்சியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதனப் பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் கரூரில் கூண்டு கட்டப்பட்டது. ஜெர்மனி வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் 5890 கோடி ரூபாய் செலவில் 2000 புதிய பிஎஸ்-6 வகை பேருந்துகள், 2000 மின்சார பேருந்துகள் வாங்க 2019 ஒப்பந்த புள்ளி போடப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போதைய திமுக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

அதிமுக ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுவதும் கட்டப்பட்ட பேருந்துகளையே கொள்முதல் செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்தன. உள்ளூர் பஸ் பாடி பில்டிங் நிறுவனங்கள் பாதிக்கும் என்பதால் அந்த அழுத்தத்திற்கு அடிபணியாமல் பஸ் சேஸ் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதுபோன்ற எந்த ஒரு நிபந்தனையும் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இல்லை மற்றும் ஜெர்மன் ஒப்பந்தத்திலும் இல்லை. திமுக அரசு சேஸ் மட்டும் கொள்முதல் செய்து கூண்டு கட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு அளித்திருக்க வேண்டும். ஆனால் திமுக அரசு முழுமையாக பாடி கட்டப்பட்ட பஸ்களை வாங்க ஒப்பந்தபள்ளி கேட்டு இருப்பது உள்ளூர் மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

மேலும் இந்த ஒப்பந்த புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளில் 2500 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இது முழுக்க முழுக்க தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான செயலாகும். திமுக அரசு வழக்கம்போல் மத்திய அரசின் மீது பழி போடாமல் மாநில அரசின் கொள்கையை மாற்றி உள்ளூர் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இத்தொழிலை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும்" என முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK government has requested a contract for the purchase of buses


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->