சனாதன விவகாரம் - கோவையில் போஸ்டர் மூலம் போர் செய்யும் திமுக-பாஜக.! - Seithipunal
Seithipunal


சனாதன விவகாரம் - கோவையில் போஸ்டர் மூலம் போர் செய்யும் திமுக-பாஜக.!

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் குறித்து பேசியுள்ளார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகளுடன் இணைந்து பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே, அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் என்றும், அவருடைய தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சனாதனம் குறித்து கோவை மாவட்ட திமுக மற்றும் பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். முதலில்  திமுக சார்பில் "போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்" என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதே பகுதியில் பாஜக வினர் சார்பில், "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி போஸ்டர் போரில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இரண்டு போஸ்டர்களும் மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம் என்று அனைத்து பகுதிகளிலும்  ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and bjp posters viral in covai for sanatana issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->