திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திடீர் தர்ணா போராட்டம்: காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அத்துமீறி நுழைந்த மதுரை சுகாதார அலுவலர், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்தினார். 

இந்த சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவு முன்பு மருத்துவர்கள், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மருத்துவர்கள் கார்த்திகேயன், தங்கராஜ், லலித் குமார், சுந்தரம், கிருஷ்ணசாமி, பிரசாத் உள்பட 50 க்கும்  மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். 

போராட்டத்தின் போது, மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை பணிநீக்கம் செய்ய வேண்டும். மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். 

பணி சுமையை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதே போல் மதுரை சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Govt Hospital Doctors Sudden Strike


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->