ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வினோத திருவிழா: விடிய விடிய நடைபெற்ற கறி விருந்து! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றின் கரையோரம் 1000 ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும் மழை வேண்டியும் திருவிழா நடத்துவது வழக்கம். 

இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பெரிய முத்தாலம்மன் கோவிலில் இருந்து சுவாமி பேட்டி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க சடையாண்டி கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு பின் சுவாமி பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

இதனை தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடனாக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. 

சடையாண்டி சுவாமிக்கு நள்ளிரவில் நடத்தப்படும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

நள்ளிரவு தொடங்கிய இந்த அன்னதானம் விடிய விடிய நடைபெற்றது. அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000 மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தன. இந்த வினோத திருவிழாவை கண்டுகளிக்க சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul curry virundhu only men participated


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->