தலையில் தேங்காய் உடைத்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


தலையில், தேங்காய் உடைத்து சாமிக்கு நேர்த்திக்கடன்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே ஜிகேடி நகரில் உலக மக்கள் நலனுக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் குறும்பர் இன மக்கள் தங்களது குல தெய்வங்களான ஸ்ரீ குடியாப்பன்,ஸ்ரீ லிங்கம்மன், ஶ்ரீ சம்பரள்ளி,ஶ்ரீ கோடில் ராய் உள்ளிட்ட தெய்வங்களைத் தலை மேல் சுமந்தபடி கலாச்சார கலை நிகழ்ச்சிகளாகிய டொள்ளு குனித, வீரகாசே, வீரபத்திர குனித, கம்சாளே, ஆகிய நடனங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் ஜிகேடி நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அந்த சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் வினோத திருவிழா நடத்தப்பட்டது. 

இந்தத் திருவிழாவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தேங்காய்களைத் தலைமேல் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல், அங்கிருந்த சிலர் சாட்டையால் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டனர். 

இந்த திருவிழாவிற்கு ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees broke coconut on head in temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->