பத்திரப்பதிவில் பிரச்சனையா? ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கருத்து கேட்கும் தமிழக அரசு!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு ரூ.20க்கான முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 ஆகவும், ரூ.100 ஆக இருந்த கட்டணம் ரூ.1,000 ஆகவும் உயர்த்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்

ஆனால் தமிழக அரசு பத்திரப்பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை என கூறி பத்திரப்பதிவு துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவணன் நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தியது.

இதனால் தமிழக முழுவதும் கட்டிடங்கள் மற்றும் நிலங்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இதன் காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் பதிவு செய்வதிலும் தொய்வு ஏற்படுவதாக ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் ரியல் எஸ்டேட் தொழில்செய்பவர்களின் கருத்துக்களை கேட்க தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பத்திர பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "எதிர்வரும் 23.07.2023 முற்பகல் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் கட்டிடம் மற்றும் மனை விற்கும் தொழில் புரியும் அனைத்து கூட்டமைப்புகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்" என பத்திர பதிவுத்துறை தலைவர் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deed dept arranged meeting for real estate agents


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->