மனைவியுடன் கட்டாய தாம்பத்தியம் குற்றமா ? நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்..! - Seithipunal
Seithipunal


மனைவியிடம் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு கொள்வதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

திருமணத்திற்கு பின்னர் மனைவி யுடன் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் நேற்று மாநிலங்களவை வாதத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பினாய் விஸ்வம் இது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது, நாட்டில் நடக்கின்ற அனைத்து திருமணமும் பன்முறை திருமணமாகாத இதேபோல நாட்டில் எல்லா ஆண்களையும் கற்பழிப்பு அவர் என்று கருதுவது நல்லதென்று இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை இருக்கும்பொழுது பிரிவாக விவாதிப்பதற்கு மாநிலங்களவையில் விதி எண் நாப்பத்தி ஏழு அனுமதிக்காது என தெரிவித்தார்.

மேலும், மாநில அரசுடன் இணைந்து பெண்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாஜக எம்பி சுஷில் மோடி , திருமணத்துக்குப் பின்னான கட்டாய தாம்பத்தியத்தை கிரிமினல் குற்றமாக அறிவிக்க அரசு ஆதரவாக உள்ளதா? திருமணம் என்ற நிகழ்வை முடிவுக்கு வந்துவிடும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசும்பொழுது இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதில் அளிக்க முடியாது எனவும் 2017-ம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் திருமண பாலியல் வன்கொடுமை குறித்த எந்த சட்டமும் வரையறுக்கப்படவில்லை மேற்கத்திய நாடுகளில் குற்றமாக இருந்தாலும் இந்தியாவில் கண்மூடித்தனமாக எதையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.மேலும் இந்த சட்டத்தை ஆண்களுக்கு எதிராக உபயோகப்படுத்த அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Debate in Parliament Is forced marriage with a wife a crime


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->