கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் எம். பி ஜோதிமணி தர்ணா.. மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதாக புகார்..! - Seithipunal
Seithipunal


கரூர் ஆட்சியரை கண்டித்து காங்கிரஸ் எம். பி. ஜோதி மணி தர்ணாவில் ஈடுப்பட்டார்.

கரூர் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார்.  கரூர் மாவட்டத்தில் அலிம்கோ நிறுவனம் மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாமை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,  என்னை மக்கள் பணி செய்யவிடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக தெரிவித்தார். ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன்.

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை?  என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்  தர்ணா நடத்திய இடத்திற்கு வந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். மேலும், முகாம் நடைபெறுவதாகவும் தயவுசெய்து வாங்க எனவும் கைக்கூப்பி வணங்கி கேட்டார். ஆனால், ஜோதி மணி சமாதானம் ஆகாத்தால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mp jothimani protests against district collector


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal