தூத்துக்குடி | காங்கிரஸ் நிர்வாகி கொலை! பெண் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, ஸ்ரீ வைகுண்டம் அருகே கொங்கராயன்குறிச்சி புதுமனை தெருவை சேர்ந்தவர் வேம்புகுரு. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் மாறிச்செல்வம் (வயது 30). 

இவர் கருங்குளம் வட்டார காங்கிரஸ் செயலாளராக இருந்தார். இவர் அடிக்கடி தாய் லட்சுமியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்த நிலையில் கடந்த 3ஆம் தேதியும் அவர் தாயிடம் பணம் கேட்டுள்ளார். 

அப்போது மாறிசெல்வத்திற்கும் அவரது தாய் மற்றும் அவரது தம்பி இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த தாய் மற்றும் தம்பி இருவரும் சேர்ந்து மாறி செல்வத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் மாரிச்செல்வம் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து மாறிசெல்வத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த ஸ்ரீ வைகுண்டம் போலீசார் கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்து தாய் லட்சுமி மற்றும் அவரது இளைய மகன் இருவரையும் கைது செய்தனர். 

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரிசெல்வம் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress administrator murder case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->