#கோவை : 5 மாத கர்ப்பமாக இருந்த கல்லூரி மாணவி திடீர் உயிரிழப்பு.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் 5 மாத கர்ப்பமாக இருந்த கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி பி.எட் படித்து வந்தார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென்று நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் தங்கி இருந்த தோழி, ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

பின்பு மாணவி மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியை கர்ப்பமாக்கியது யார்? மாணவி திடீரென உயிரிழந்ததற்கான காரணம் என்ன? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college girl who was 5 months pregnant died suddenly in kovai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->