கோவை : அறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்த நடத்துனர் - நெகிழ்ச்சியை உண்டாக்கிய சக ஊழியர்கள்.!!  - Seithipunal
Seithipunal


அறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்த நடத்துனர் - நெகிழ்ச்சியை உண்டாக்கிய சக ஊழியர்கள்.!! 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் வாகன விபத்தொன்றில் சிக்கியுள்ளார்.

இதில் அவரது கால் உடைந்துள்ளது. இந்தக் காலை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும், அதற்கான செலவு லட்ச கணக்கில் ஆகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணத்தைத் திரட்ட முடியாமல் கதிர்வேலின் குடும்பத்தினர் தடுமாறி வந்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கதிர்வேலின் சக பணியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி கதிர்வேலுக்கு தலா ரூ.1000 வீதம் அளிக்க முன்வந்தனர். அதன் படி, ரூ.3.35 லட்சத்திற்கான காசோலையை கதிர்வேலின் தந்தை குப்பண்ணனிடம் வழங்கியுள்ளனர். 

போக்குவரத்துத் துறையில் ஊழியர் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக சக ஊழியர்கள் அனைவரும் தலா ரூ.1000 என்று பங்களித்து உதவியது, கோவை போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

co employees help to govt bus conductor for surgery in covai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->