கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் திடீர் போராட்டம்!   - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. 

இந்த பேருந்து நிலையம், கடந்த 30 ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களில் செல்லக்கூடிய பேருந்துகள், சென்னைக்கு செல்லும் பேருந்துகள் சங்கர நேத்ராலயா பள்ளி அருகே உள்ள சர்வீஸ் சாலையில் செல்வதால் பள்ளிக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் இந்த சர்வீஸ் சாலையை பள்ளி போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

போக்குவரத்து அதிகாரிகள் காலை, இந்த சர்வீஸ் சாலையில் பள்ளி வாகனங்கள் செல்லக்கூடாது என தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் போலீசார் மாற்று சாலை அமைக்கும் வரை இந்த வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய பேருந்துகள் செல்லும் என பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர்கள் உடனடியாக மாணவர்களின் நலன் கருதி மாற்று பாதை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clambakkam bus station people protest


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->