காலில் விழ வச்சு இருக்காங்க.. அமைச்சர் எ.வ வேலுவுக்கு எதிராக.. கொந்தளிக்கும் அருள்.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3வது தொழில் வளாகம் அமைப்பதற்காக மேல்மா, நர்மபள்ளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டியது. விவசாய விளைநிலங்களை அழிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் மேல்மா கிராமத்தில் 125 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தினர். கடந்த நவம்பர் 4ம் தேதி காவல்துறை விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கியதோடு 54 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்து அதில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகபொதுமக்கள் கொந்தளித்ததால்  6 பேர் மீதான குண்டர் சட்டம் உடனடியாக ரத்துசெய்யப்பட்டதோடு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.


அதேவேளையில் விவசாயிகளுக்கு ஆதரவாக முன்னின்று போராடிய உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் திரும்ப பெறப்படவில்லை. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அருள் ஆறுமுகம் மீதான கொண்ண்டார் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜனவரி 4-ம் தேதி விசாரணைக்கு வந்த போது அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்ட வழக்கைத் திரும்பப் பெறும் முடிவில் தமிழக அரசு இருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.  இதையடுத்து அருள் ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்பு காவல் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பாளையங்கோட்டை சிறையில் இருந்து அருள் ஆறுமுகம் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அவரை விவசாயிகள் மாலை அணிவித்தது விவசாயிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது செய்துயாளர்கள் சந்தித்த அருள் ஆறுமுகம் "மிகுந்த மனதைரியத்துடன் வந்துள்ளேன். சிறைக்குச் செல்லும் முன்பு இருந்ததை விட இப்பொது பலமடங்கு மக்களுடன் இணைந்துப் போராட்டக்களத்தில் நிற்கப் போகிறேன். அமைச்சர் எ.வ வேலு தன்னுடைய சுயரூபத்தைக் காட்டிவிட்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை திமுக மாவட்ட துணை செயலாளரை போல கையில் வைத்துக்கொண்டும், மாவட்ட எஸ்.பியை கூலிப்படை தலைவர் போன்றும் இயக்கியிருக்கிறார். வேளாண்குடி மக்களை தொடர்ந்து பயமுறுத்தக்கூடிய வேலையை மட்டுமே காவல்துறை செய்துகொண்டிருந்தது. ஆயிரம் போலீஸாரை ஊருக்குள் இறக்கி சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்ததே காவல்துறைதான்.

விவசாயிகள் மீது கொண்டார் தடுப்பு சட்டம் போட்டு வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை அழைத்துசென்று காலில் விழ வைத்து அருள்தான் எல்லாத்தையும் பண்ண வைத்தார் என அமைச்சர் சொல்ல வைத்துள்ளார். அமைச்சர் எ.வ.வேலு சிப்காட் கொண்டுவந்தால் கான்டிராக்ட் பணிகள் கிடைக்கும். அங்கு வரும் கம்பெனிகளால் நன்கொடை கிடைக்கும் என்பதுதான் அவரின் திட்டம். என் மீதான கொண்டார் சட்டம் ரத்து செய்ய முதலமைச்சரின் பரிந்துரை டகம் கரணம் என்று சொல்வதே தவறு. நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்விகளால் ரத்து செய்துள்ளனர்" என கடுமையாக எ.வ வேலுவை தாக்கி பேசியுள்ளார். ஜாமினில் வெளியே வந்த அருள் ஆறுமுகத்தை விவசாயிகளும் கிராம மக்களும் மேளதாளத்துடன் வரவேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheyyar sipcot protest committee coordinator alleges against minister evvelu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->