ஆவின் பணியாளர்கள் நீக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை...!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் நேரடி பணி நியமன முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி தமிழக முழுவதும் பணியாற்றி வந்த ஆவின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து மதுரை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றிய 25 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இன்று இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு ஆவின் பணியாளர்கள் தரப்பில் எந்த ஒரு விளக்கம் கேட்காமலும், நோட்டீஸ் அனுப்பாமலும்  25 ஊழியர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்யப்பட்டதாக வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆவின் நிறுவனத்தில் பணியாற்றிய 25 ஊழியர்களின் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC ordered Interim restraint on dismissal of aavin Employees


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->