சென்னையில் போக்குவரத்து மாற்றம்! திணறும் வாகன ஓட்டிகள்! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டேரிலிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் போன்ற இடங்களில் மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக இன்று முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக செல்லவும் ஜெமினி மேமாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் வழியாக செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் இடது புறம் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம். 

உத்தமர் காந்தி சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் திருமலை பிள்ளை ரோடு வழியாக ஜெமினி மேம்பாலம் சென்றடையலாம். 

மற்ற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட வழி பாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Traffic change


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->