பிட்காயின் மோசடியால் நடுத்தெருவுக்கு வந்த ஐ.டி நிறுவன தலைமை பொறுப்பாளர்.. கடனாளிகள் கடத்தி, காவல் நிலையத்தில் கதறல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த மோகன். மோகன் டைடல் பார்க்கில் இருக்கும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், தலைமைப் பொறுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் இணையதள மோசடி விவகாரத்தில் தன்னை கடத்தி சிலர் மிரட்டுவதாக அடையாறு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்த விசாரணையில், பிட்காயின் மோசடி விவகாரம் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. நைஜீரிய கொள்ளை கும்பலானது பரிவர்த்தனை தளங்களை உருவாக்கி, அதில் 45 லட்சம் மதிப்புள்ள காயினை வாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய் பணம் உள்ள 1 பிட்காயினை வைத்திருப்பவர்களின் வங்கி கணக்கில், இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றும், 5 பிட்காயினை ரூ. 35 இலட்சம் செலுத்தி வைத்திருந்தால், இந்திய மதிப்பில் ரூபாய் 34 கோடி கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டு இருந்துள்ளது. 

இதனை நம்பி பணத்தை கணக்கில் செலுத்தும் வகையில், 45 லட்சம் டாலர் நமது கணக்கில் வந்துவிடும் என்றும், அந்த பணத்தை எடுக்கவே முடியாது என்பதுதான் இதில் விவகாரமாக அமைந்துள்ளது. இது தெரியாமல் மோகன் பணத்தை கட்டிய நிலையில் கடனை வாங்கியும், மனைவி மற்றும் மகளின் நகையை விற்பனை செய்து பணத்தை செலுத்திய நிலையில், கடன் கொடுத்தவர்கள் மோகனை மிரட்ட துவங்கியுள்ளனர். 

இதனால் பயந்த மோகன் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்ற நிலையில், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரமேஷ் மற்றும் பிரபாகரன் கடத்தி வந்து கடனை கேட்டு பிரச்சனை செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காவல் துறையினரை இருவரையும் கைது செய்தனர். மாதம் 3 இலட்சம் சம்பாரித்து, ஓவர் நைட் பணக்காரன் யோசனையால், வேலையும் இழந்து மோகன் தவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Online Fraud Police Investigation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->