ஊழல் செய்த அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் சிவந்தங்கலை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தனது பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் ஸ்ரீபெரும்புதூரில் 11.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 சதுர அடி நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக இவர் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யப் போகிறீர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010 மனுதாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கி விட்டதால் தற்போது எந்த வழக்கு ரத்து செய்ய உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த சொத்து விவரங்களை ஆய்வு செய்து அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அரசு துறைகளில் நிலவும் ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக தனி தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai highcourt order govt officials corruption assets take over


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->