சிவில் தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் - டி.என்.பி.எஸ்.சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த அறிவிப்பின் படி கடந்த நவம்பர் மாதம் நடந்த பிரதான தேர்வின் முடிவுகள் கடந்த ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வின் முடிவில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில், பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பாமல் இட ஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக பி.சி., எம்.பி.சி., பிரிவு மாணவர்களை பொதுப் பட்டியலில் சேர்க்காமல் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியலை ரத்து செய்யும்படியும், புதிய பட்டியலை இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் என்றும் 245 சிவில் நீதிபதிகளுக்கான ப்ரொவிஷனல் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court order civil exam list cancell


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->