130 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி உலக சாதனை படைத்த தமிழக சிறுமி.. குவியும் பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


130 நாடுகளின் தேசிய கீதங்களை ஸ்ருதி மாறாமல் பாடி உலக சாதனை படைத்த சென்னை சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சிறுமி சுபிக்‌ஷா (வயது 12). 8ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியான இவர் உலக நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தீவிரமாக பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, அவர் அல்பேனியா, ஆப்கானிஸ்தான் என அகர வரிசைப்படி 192 நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடம் செய்து வைத்துள்ளார்.

 இந்த நிலையில், சென்னை திருவொற்றியூரில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமி சுபிக்‌ஷா ஏறக்குறைய நிகழ்ச்சியில் 6 மணிநேரம் வரை இடைவிடாது 130 நாடுகளின் தேசிய கீதங்களை, ஸ்ருதி மாறாமல் பாடி உலக சாதனை படைத்துள்ளார். தற்போது அவருக்கு  பாராட்டுகள் குவிந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai girl sung 130 countrys national anthem


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->