டிஜிட்டல் முறையில் சான்றிதழ் வழங்க சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


டிஜிட்டல் முறையில் சான்றிதழ் வழங்க சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு.!!

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வாங்குவதற்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வருகை தருவார்கள். அப்படி வருபவர்களுக்கு  அதிகாரிகள் உடனடியாக சான்றிதழ்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதனால் மக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக, நடப்பாண்டின் இறுதிக்குள் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வழங்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளதாவது:- "தற்போது, பிறப்பு, இறப்பு, சுகாதார சான்றிதழ், திட்ட அனுமதி உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகி வருகின்றன. 

மேலும் வர்த்தக உரிமம், சொத்து வரி மதிப்பீட்டு, தொழில்முறை வரி மதிப்பீடு போன்ற சேவைகளுக்கான டிஜிட்டல் சான்றிதழ்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றுச் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இந்த டிஜிட்டல் முறையின் மூலம் பொதுமக்கள் நேரடியாக வர வேண்டிய நிலை இருக்காது. சான்றிதழ்கள் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க ஏதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai corporation certificate are all provide digital


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->