சென்னை முக்கிய சாலையில், பொக்லைனால் முட்டுகொடுக்கப்பட்ட மின்கம்பம்.. பீதியுடன் கடக்கும் வாகனங்கள்.!  - Seithipunal
Seithipunal


சென்னை அருகே ஆலந்தூர், கிண்டி மற்றும் மடுவின்கரை குடியிருப்பு பகுதிகளில் தேங்குகின்ற மழை நீரை வேளச்சேரி ஏரிக்கு கொண்டு செல்கின்ற வகையில் கிண்டியிலிருந்து ஆதம்பாக்கம் வரை இருக்கின்ற சிட்டி லிங்க் ரோட்டில் கால்வாய் அமைக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஆதம்பாக்கத்தின் என்.ஜி.ஓ. காலனி அருகில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு கம்பிகள் கட்டப்பட்டு இருக்கின்றன. அங்கே பள்ளம் தோண்டியபோது மின்சார கம்பம் ஒன்று சாய்ந்தது. இதை பொக்லைன் இயந்திரத்தை கொண்டு முட்டுகொடுத்துள்ளனர். 

இந்த சாலையானது புறநகர் பகுதியிலிருந்து கிண்டி செல்லும் முக்கிய சாலையாகும். எனவே, இப்பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும். மேலும், தற்போது இந்த பொக்லைன் எந்திரத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

பலத்த காற்று வீசினாலோ அல்லது மேலும், மழை பெய்தாலோ அந்த மின்கம்பம் சரிந்து விழ கூடிய ஆபத்து இருக்கின்றது. எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து இருக்கின்றனர். 

மழைநீர் கால்வாய் பணியை முடிக்காமல், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் சாய்ந்த நிலையில் இருக்கின்ற மின்கம்பத்தை சரி செய்ய முடியாமல் இருப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai alandhur road electricity post make fear to peoples


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->