வேங்கைவயல் விவகாரம்.."குற்றவாளிகளை நெருங்கும் சிபிசிஐடி".. 30 நாட்கள் கால அவகாசம் கோரி மனு..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் வேங்கை வயல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்படி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த மூன்று மாதங்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி தற்பொழுது வரை 147 பேரிடர் நடத்தப்பட்ட விசாரணையில் 119 பேர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதற்கிடையே தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம் பகுப்பாய்வுக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை ஆய்வு முடிவு வெளியானது.

இந்த ஆய்வு முடிவின் படி வேங்கைவயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களின் கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த முரளி ராஜா உட்பட மூன்று பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் நெருங்கி உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை பதிவு செய்ய கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இறுதி விசாரணை அறிக்கை பதிவு செய்ய 30 நாட்கள் அவகாசம் வேண்டும் என சி.பி.சி .ஐ.டி கால அவகாசம் கோரியுள்ளது. விசாரணை தொடங்கி 100 நாட்கள் கடந்த நிலையில் மேலும் 30 நாட்கள் அவகாசம் வேண்டும் என அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி சார்பாக மனு தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி தாக்கல் செய்த மனு மீது கூடிய விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID petition seeking 30 days time in Vengaivyal issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->