கோடநாடு வழக்கு || முதன்மை குற்றவாளியிடம் சிபிசிஐடி இன்று முக்கிய விசாரணை.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை கோடநாடு போலீசார் விசாரித்து வந்த நிலையில் கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலிசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் இன்று சிபிசிஐடி போலீசார் முன்பு விசாரணைக்காக அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். முன்னதாக சயானிற்கு  சிபிசிஐடி தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்ய கடந்த ஜூன் மாதம் சிபிசிஐடி போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து கோவையில் உள்ள தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் ஆய்வின் முடிவில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக மூடி முத்திரையிடப்பட்ட உறையில் உதகை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கயடித்து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID main inquiry today Kodanadu Case prime accused


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->