காதலை கைவிட வற்புறுத்திய காதலி.. உல்லாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் மிரட்டிய காதலன்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் பூலுவபட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் இளைஞர் ஷாஜகான் (வயது 26). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் அதே நிறுவனத்தில் 22 வயதான இளம் பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் இளம் பெண்ணும், ஷாஜகானும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். மேலும் திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி ஷாஜகான் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வந்தது. இதில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண் ஷாஜகான் பழகுவதை நிறுத்திக் கொண்டார்.

மேலும் ஷாஜகான் தனது காதலியை வேறு எண்ணில் தொடர்பு கொண்டு மீண்டும் அழைத்துப் போது மறுப்பு தெரிவித்து இனி பேச வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த ஷாஜகான் இருவரும் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boyfriend blackmail nude photos release girlfriend in thirupur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->