#BREAKING:: கீழடியில் வீதிமீறல்; வெயிலில்"மாணவர்கள்" அவதி..! "நடிகர் சூர்யா" மீது போலீசில் பாஜக புகார்..!! - Seithipunal
Seithipunal


கீழடி அருங்காட்சியகத்தை மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க பாஜக வலியுறுத்தல்..!!

கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் பார்வையிட்டனர். வழக்கமாக காலை 10 மணியிலிருந்து பார்வையாளர்கள் கீழடி அருங்காட்சியகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

ஆனால் கடந்த ஒன்றாம் தேதி காலை 9 மணிக்கு கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்டு நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருட்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் அருங்காட்சியகத்தூள் சூர்யாவின் குடும்பத்தினர் இருந்ததால் பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணி நேரம் அருங்காட்சியகத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்டனர். இதனால் பள்ளி மாணவர்கள் செய்வதறியாது வெயிலில் நின்றபடி அவதிக்கு ஆளாகினர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் நடிகர் சூர்யாவின் குடும்பத்தினருக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிடம் மதுரை பாஜகவினர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனிப்பட்ட நலனுக்காக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோரை விதிகளை மீறி உள்ளே அழைத்துச் சென்றுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை வெயிலில் காக்க வைத்த‌தாகவும் கூறயுள்ள பாஜகவினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாஜகவினர் கீழடி அருங்காட்சியகத்தை மத்திய தொல்லியல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP complains to police against actor suriya for keezhadi issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->