காதலிக்காக நாய் திருடி சிக்கிக் கொண்ட பைக் திருடன்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருசக்கர வாகனம் மற்றும் வாகன பேட்டரிகளை திருடி வந்த நபரை நாய் திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் அடுத்த நடேசன் நகரை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் தனது யமாஹா ஆர்.எக்ஸ் 100 பைக்கை கடந்த ஒன்றாம் தேதி வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொழுது காணாமல் போய் உள்ளது. இதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அதேபோல் சாலிகிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் விலை உயர்ந்த பல்சர் பைக் திருடு போன சம்பவத்திலும் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடியபோது அதே நம்பர் திருடி சென்றது தெரியவந்தது. அதே நபர் பல்வேறு வாகனங்களில் இருந்து பேட்டரிகளை திருடி வந்ததும் விசாரணையில் தெரிய வரவே போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாலிகிராமத்தைச் சேர்ந்த தில்லையக்கரசி என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது செல்லப் பிராணி நாய் ஒன்று காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்தார். அந்த செல்ல பிராணி ரூ.30,000 மதிப்புள்ள பீகில் எனும் உயர்ரக வெளிநாட்டு நாய். இந்த வழக்கிலும் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்த போது பைக்குகளை திருடிய அதே நபர்தான் இந்த நாயையும் திருடி உள்ளார் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சாலிகிராமம் முழுவதும் சல்லடை போட்டு தேடிய போலீசாரிடம் தசராபுரம் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்பவர் சிக்கினார். அவரது வீட்டில் சோதனை செய்தபோது திருடப்பட்ட வெளிநாட்டு ரக நாயும், திருடி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பைக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டது. கையும் களவுமாக சிக்கிய சுஜித்தை கைது செய்த விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் பைக் திருடர் சுஜித் வாகனங்கள் மற்றும் வாகன பேட்டரிகளை திருடி விற்று கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. தனது காதலிக்கு நாய்கள் பிடிக்கும் என்பதால் விலை உயர்ந்த வெளிநாட்டு நாயை திருடி காதலிக்கு பரிசளிக்க திட்டமிருந்த நிலையில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பைக்களை திருடி அதனால் வரும் பணத்தில் விலை உயர்ந்த வெளிநாட்டு ரக நாயை வாங்காமல் நேரடியாக நாயை திருடிய பைக் திருடனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bike thief caught stealing a dog for his girlfriend


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->