"சிறந்த பசுமை விழிப்புணர்வாளர்" பெற்ற என்.ஆர். தனபால்..!  - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அன்னை வயலட் பன்னாட்டு பள்ளியும் இணைந்து,அம்பத்தூரை, சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளிடையே செடி நடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து முகாம் நடத்தினார்கள். 

இந்த முகாம், ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கிடையே செடி நட வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டது. முகாமின் மூலம் மாணவ-மாணவிகளின் வீடுகளில் இருக்கும் செய்தித்தாள்களை சேகரித்து அதனை மறுசுழற்சிக்கு எடுத்துச்செல்வது சம்பந்தமாக அவர்களுக்கு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும், கல்லூரியில் நடைபெற்ற ஓணம் விழாவில், சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் பசுமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக, இதுவரை 2 ஆயிரம் மரங்களுக்கு மேல் நடுவதற்கு ஏற்பாடு செய்து தந்த அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனரும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர். தனபாலனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் "ட்ரீம் கலாம்" அமைப்பின் மூலம் "சிறந்த பசுமை விழிப்புணர்வாளர்" என்ற விருது வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

"Best Green Awareness" Awarded by N.R. Dhanapal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->