ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை - மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி . பண்டிகை காலம் நெருங்கி வருவதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களையும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

அதேபோல் பயணிகள் பலரும் பட்டாசு போன்ற பொருட்களை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர்களுக்கு எடுத்துச் செல்வார்கள். 

இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு சிறிய தீப்பொறி கூட பயங்கரமான அசம்பாவிதங்களை ஏற்படுத்த வழி வகுக்கும். அதனால் ரயில் பயணத்தின் போது பயணிகள் அவர்களது உடைமைகளுடன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, சிகரெட் மற்றும் பட்டாசுகள் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது.

இதனை மீறி தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரும் பயணிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban on carrying firecrackers in trains


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->