#சென்னை || பாஜக நிர்வாகி வீட்டு நீச்சல் குளத்திற்கு குடியேறிய முதலை! - Seithipunal
Seithipunal


சென்னையில் தற்பொழுது பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகல் பணி முடிவடையாததால் நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் டி.எஸ்.பாலையா கார்டனில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி மாவட்டத் தலைவர் பாலாஜி தங்கவேல் வசித்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் தேங்கி மாசடைந்து இருந்ததால் நீச்சல் குளத்தை சுத்தம் செய்வதற்காக அதில் இருந்த தண்ணீர் வெளியேற்றியுள்ளனர்.

அப்போது நீச்சல் குளத்தில் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று இருந்துள்ளது. பாஜக பிரமுகர் பாலாஜி தங்கவேல் முதலைப் பண்ணையில் முதலை பராமரிப்பு பணி பயிற்சி மேற்கொண்டவர் என்பதால் அவர் வீட்டு நீச்சல் குளத்தில் இருந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு வைத்து, வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பெயரில் பாஜக பிரமுகர் வீட்டிற்கு வந்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள், முதலைக்குட்டியை மீட்டு எடுத்துச் சென்றனர். மேலும் அந்த நீச்சல் குளத்தில் முதலைக்குட்டியுடன் ஒரு ஆமை குட்டியும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby crocodile in BJP executive house swimming pool in Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->