அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.25 கோடியாக தருகிறேன் - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அயோத்தி சாமியார்.! - Seithipunal
Seithipunal


அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.25 கோடியாக தருகிறேன்... மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அயோத்தி சாமியார்.!

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "சனாதனத்தை எதிர்க்கக்கூடாது, கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. அதுமட்டுமல்லாமல், உதயநிதிக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில், அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியாரும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் படத்தை கத்தியால் குத்தியும், தீயால் எரித்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 

மேலும், உதயநிதியின் தலையைக் கொய்தால் 10 கோடி ரூபாய் தரப்படும் என்று அவர் தெரிவித்தார். சாமியாரின் கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் உதயநிதி, நான் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன். தனது கருத்தை திரும்பப்பெற போவதில்லை என்று உறுதிபட தெரிவித்தார்.

இந்த நிலையில், அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா மீண்டும் உதயநிதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, "உதயநிதி தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்.

இல்லை என்றால் எங்கிருந்தாலும் தப்ப முடியாது. ஏற்கெனவே உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்திருந்த நிலையில், அந்தத் தொகை 25 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்" என்று சாமியார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhya Paramahamsa Acharya annaounce 25 crore to uthayanithi head for sanatanam issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->