ஒரு மணி நேரம்.. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தண்டால்கள் - உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய நபர்.! - Seithipunal
Seithipunal


ஒரு மணி நேரம்.. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தண்டால்கள் - உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய நபர்.!

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பிரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் லூகாஸ் ஹெல்ம்கே. இவர் ஒரு மணி நேரத்தில் 3,206 தண்டால்களை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இவை ஒரு நிமிடத்திற்கு 53 தண்டால்கள் என்ற சராசரியை கொண்டது. 

இதற்கு முன்பாக கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டேனியல் ஸ்காலி என்பவர் அதிக தண்டால் எடுத்து சாதனை புரிந்து உள்ளார். இந்த சாதனையை முறியடிக்க நினைத்த லூகாஸ், தனது ஒரு வயது மகனுக்கும் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இந்தத் தகவலை கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதற்காக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை அவர் பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்த சாதனை முயற்சியை லூகாஸ் தனது உடற்பயிற்சி கூடத்திலேயே நடத்தி காட்டியுள்ளார்.

இதனுடன் தனது சாதனையை முடித்து கொள்ள விரும்பாத லூகாஸ் இனி ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு சாதனையையாவது முறியடிக்க வேண்டும் என்று  முடிவெடுத்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

austreliya man broke world record at three thousand dandal one hour


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->