உதவி மருத்துவர் பணியிடம் : விண்ணப்பிக்க 25 தேதி கடைசி நாள் -  மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தகவல்..!  - Seithipunal
Seithipunal


மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய செய்திக்குறிப் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"நேற்று 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, அரசு மருத்துவமனைகளில் 1,021 உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

அந்த பணியிடங்களில், அனைத்து சமூகப் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 74 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு நான்கு பிரிவுகளும் ஒதுக்கப்படுள்ளன. 

இதைத்தொடர்ந்து, உதவி மருத்துவப் பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கணினிவழி எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். இந்த தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

மேலும், எஸ்.சி. எஸ்.சி.ஏ. எஸ்.டி. மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்"  என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

asst doctor post apply last date in october 25


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->