சசிகலாவை முக்கிய குற்றவாளியாக அறிவித்தது ஆறுமுகசாமி ஆணையம்! - Seithipunal
Seithipunal


முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சிக்கினார்!

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்பாராத வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவர் மரணத்தில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள், அதிமுகவின் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையானது இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலை, எந்த விதமான சிகிச்சை மற்றும் எதிர்பாராமல் நடந்த மரணம் உட்பட அனைத்து விவரங்களும் அந்த அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைப்படி சசிகலா, கே.எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2012 இல் மீண்டும் இணைந்த ஜெயலலிதா சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை.  ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தான உண்மையை வெளியிட சசிகலா தடுத்துள்ளார். இந்த விசாரணையில் சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arumugasamy Commission declared Sasikala as the main culprit


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->