கோவை சம்பவம் குறித்து அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஜமேசா முபின் என்பவர் பலியானார். அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரசாயன பொருள் மற்றும் பொட்டாசியம் சல்பரை போலீசார் கண்டுபிடித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது "ஜமேசா முபின் என்பவரின் வீட்டில் இருந்து 50 கிலோ கிராம் அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ஃபியூஸ் வயர் மற்றும் 7 வோல்ட் பேட்டரிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதை பற்றிய முழு தகவலை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் மௌனம் காக்கிறார். 

எனவே கோவை கார் வெடிப்பு வழக்கை என்ஐஏவுக்கு மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். மாநில காவல்துறை இந்த வழக்கை என்ஐஏ-க்கு மாற்றுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதனால் என்ஐஏ விரைவாக செயல்பட முடியும்" என அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai wrote a letter to Amit Shah about the Coimbatore incident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->