ஆழ் கடலில் 9 தமிழக மீனவர்கள் கைது.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை அவசர கடிதம்..!! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். படகு பழுதாகியதால் காற்றின் வேகம் காரணமாக நெடுந்தேவு அருகே படகு தரைதட்டி நின்ற நிலையில் கைது செய்யப்பட்டனர்.

படகு பழுது காரணமாக ஒதுங்கியதால் மீனவர்களை விடுவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள் கைது செய்யப்பட்ட விடுவிக்க நடவடிக்கை எடுத்த கோரி எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "கடந்த காலங்களில் எங்கள் மீனவர்களின் ஆழ்கடல் பாதுகாப்பை உறுதி செய்ததற்கும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai letter to Minister Jaishankar regarding arrest of Rameswaram fishermen


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->